யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி யாழ் நல்லூரில் பொலிஸாரால் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுப்பு!

Wednesday, January 17th, 2024

யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி யாழ் நல்லூரில் பொலிஸாரால் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு இணங்க நாடு பூராகவும் போதைப் பொருள் ஒழிப்பு வேலைத் திட்டமாகிய யுத்திய  வேலை திட்டம் பொலிசாரால் நாடு பூராகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது, போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப் பொருள் கடத்துபவர்கள் என பலரும் பொலிசாரால்  கைது செய்யப்பட்டு வரும் நிலையில இன்றைய தினம்(17) யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் பொலிசாரால் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த விசேட பூஜை வழிபாட்டில் யாழ்ப்பாணம மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட அத்தியட்சகர், யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் குறித்த பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: