யாழ். வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா !
Thursday, November 16th, 2017யாழ். வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் வருடாந்தப் பரிசளிப்பு விழா இன்று வியாழக்கிழமை(16)காலை-09.30 மணி முதல் வித்தியாலய அதிபர் திருமதி- ஜோய்ஷ் நியூட்டன் தலைமையில் இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் திருமதி- ஜோய்ஷ் நியூட்டன் தலைமையில் இடம்பெற்ற விழாவில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
குறித்த விழாவில் தீவகப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.கணேசராஜா, மற்றும் துணுக்காய்க் கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.கம்சவதனி, கோட்டக்கல்விப் பணிப்பாளர் வேலணை சாரதாதேவி கிருஸ்ணதாஸ்,வேலணை துறையூர் சமாதான நீதவான் கார்த்திகேசு ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
விழாவில் தவணைப் பரீட்சைகளில் கூடிய புள்ளிகள் பெற்ற மாணவ, மாணவிகள் உட்படச் சாதனை மாணவர்கள் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.
இதன் போது மாணவ, மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
Related posts:
|
|