யாழ், வவுனியா மாவட்டங்களின் பல இடங்களில் இன்று மின்தடை !
Monday, September 4th, 2017மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். மற்றும் வவுனியா மாவட்டத்தின் பலவிடங்களில் இன்று திங்கட்கிழமை(04) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
யாழ். மானிப்பாயின் ஒரு பகுதி, கட்டுடை, அரசடி, பிப்பிலி ஆகிய பிரதேசங்களில் பிற்பகல்-01 மணி முதல் 05 மணி வரை மின்சாரம் தடைப்படவுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் பூவரசங்குளத்திலிருந்து செட்டிக் குளம் வரை, செட்டிக்குளம் வைத்தியசாலை, செட்டிக்குளம் தொலைத்தொடர்பு நிலையம், செட்டிக்குளம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஆகியவிடங்களில் தடைப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களின் பல பிரதேசங்களில் இந்த மாதத்தின் குறிப்பிட்ட சில தினங்களில் மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள் ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
வீதி விபத்துக்களில் உயிரிழப்போரில் 70 வீதமானோர் வறியவர்கள் !
கிராமப்புறப் பாடசாலைகளுக்குத்துறை சார்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் - உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய...
மேலும் பலர் சமுர்த்திப் பயனாளிகளாக இணைவதற்கு வாய்ப்பு!
|
|