யாழ்.வலிகாமம் கல்வி வலயத்தில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 12 பாடசாலைகளை மீட்டுத் தர வேண்டும் -வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை !

Sunday, November 27th, 2016

வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட 144 பாடசாலைகளில் இன்னமும்  விடவிக்கப்படாதிருக்கம் 12 பாடசாலைகளையும் மாணவர்களின் நன்மைக்காகப்  பெற்றுத்தரவேண்டும் என வலிகாமம் கல்விப்பணிப்பாளர் சந்திரராஜா வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

வலிகாமம் கல்வி வலயத்தின் சாதனையாளர்  கெளரவிப்பு விழா நேற்று சனிக்கிழமை(26) சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் நடைபெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இரு பாடசாலைகளில் கல்வி கற்பதற்கான சூழலிருந்தாலும் அதற்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. எனவே, இதற்கான தகுந்த நடவடிக்கையினை எடுத்து மாணவர்களின் நலனுக்காக உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 12 பாடசாலைகளையும் மீண்டும் எமக்குப் பெற்றுத்தரவேண்டும். இதன் காரணமாக மாணவர்கள் தற்போது தூர இடங்களிலிருக்கின்ற பாடசாலைகளுக்குச் சென்று  கல்வி கற்று வருகின்ற நிலைமை மிகவும் கவலை தருகிறது என்றார்.

unnamed (1)

Related posts: