யாழ்.வரணியில் வாள்வெட்டு ; மாணவன் உட்பட நால்வர் காயம்!

Saturday, April 9th, 2016

யாழ்ப்பாணம் தென்மராட்சி – வரணிப் பிரதேசத்தில் இனந்தெரியாத குழுவினால் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவத்தில் பாடசாலை மாணவன் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.வரணி மத்திய கல்லூரிக்கு அருகிலுள்ள வீதியூடாக குறித்த நால்வரும் பயணித்துக்கொண்டிருக்கையில் இடைமறித்த குழு ஒன்று அவர்களை வாள்களால் வெட்டியதுடன் இரும்புக் கம்பிகளாலும் தாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வரும் நேற்றிரவு 11 மணியளவில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மூவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts: