யாழ். வந்த தொடருந்தில் பெண்ணுக்குத் தொல்லை – தொடருந்து ஊழியருக்கு எதிராக முறைப்பாடு!

Tuesday, May 8th, 2018

தொடருந்து திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் தொடருந்தில் பயணம் செய்த பெண்ணை தொந்தரவு செய்தமை தொடர்பில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோட்டையிலிருந்து நேற்றுக் காலை 6.30 மணிக்குப் புறப்பட்டு யாழ்ப்பாணம் நோக்கி வந்த தொடருந்திலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த பெண் வவுனியா தொடருந்து நிலையத்தில் யாழ்ப்பாணம் நோக்கி வந்த தொடருந்தில் ஏறியுள்ளார். தொடருந்தில் பெருமளவு மக்கள் இல்லாமையினால் சிட்டை பரீட்சிக்கும் ஊழியர் பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முற்பட்டுள்ளார்.

இதனை அவதானித்தவர்கள் ஊழியரிடம் ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்று கேட்ட போது அவ்வாறு கேட்டவர்களை அவர் தாக்க முயற்சித்ததாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண தொடருந்து நிலைய அதிபரிடம் காணொலி ஆதாரத்துடன் பெண் முறைப்பாட்டைப் பதிவு செய்தார்.

Related posts: