யாழ் வண்ணை வீரமாகாளி அம்மன் கோயிலில் இடம்பெற்ற இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் 95ஆவது ஆண்டு விழா!

Friday, December 18th, 2020

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஸ்தாபிக்கப்பட்டு 95 ஆண்டு நிறையை ஒட்டிய ஆண்டுவிழாவை சிறப்பிக்கும் விசேட பூஜை வழிபாடும் அதன் நேரடி ஒலிபரப்பும் யாழ் வண்ணை வீரமாகாளி அம்மன் கோவிலில் நேற்றைய தினம் கூட்டுத்தாபனத்தின் கூட்டுதாபனத்தின் யாழ் சேவை பணிப்பாளர் திரு ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது .

இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சார்பில் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் மற்றும் யாழ் மாநகர உறுப்பினர் இரா.செல்வவடிவேல் முன்னாள் வடக்கு மாகாணசபை எதிர்கட்சி தலைவர் கமலேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஜனவரி 5. 1967 அன்று இலங்கை வானொலி கூட்டுத்தாபனமாக மாற்றம் பெற்ற போது உருவாக்கப்பட்டதாகும்.

இதனை இலங்கையின் அப்போதைய பிரதமரான டட்லி சேனாநாயக்க மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ரணசிங்க பிரேமதாசாவும் வைபவரீதியான அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.  கூட்டுத்தாபனத்தின் முதல் இயக்குனராக நெவில் ஜயவீர நியமிக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது

Related posts:

யாழ்.பேருந்து நிலைய காணி போதனா வைத்தியசாலைக்காக சுவீகரிக்கப்படப் போகிறது ஜனாதிபதியின் செயலாளர் யாழ்....
நிதி அமைச்சர் பசிலின் இந்தியாவுக்கான பயணம் இலங்கைக்கு முக்கியமானதாக அமையும் - அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்...
பிரச்சினைகளை துரிதமாக தீர்க்கும் வேலைத்திட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் வழங்கும் ஆதரவுக்கு பிரதமர் மஹிந...