யாழ். முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் உயர்தர தொழில் பாடத்துறை அமுலாக்கம்!

கலாசாலை வீதி – திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ். முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் பாடசாலையில் 13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் உயர்தர தொழில் பாடத்துறை அமுலாக்கம் திட்டம் எதிர்வரும் 10.05.2018 முதல் ஆரம்பமாகவுள்ளது.
இப் பாடசாலைக்கு அண்மையில் உள்ள அயற் பாடசாலைகளில் கல்வி கற்று 2016, 2017 ஆம் ஆண்டுகளில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றி உயர்தரத்துக்குத் தகுதி பெறாத அனைத்து மாணவர்களும் இணைந்து இக் கல்வியைத் தொடர முடியும். அனுமதி வழங்கப்பட்டுக் கொண்டிருப்பதனால் கற்க விரும்பும் மாணவர்கள் உடன் பதிவுகளை மேற்கொண்டு கற்கையைத் தொடரலாம் என யாழ்.முத்துத்தம்பி மகாவித்தியாலய அதிபர் இ.பசுபதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Related posts:
சட்டநாதர் வீதியில் இருவர் மீது வாள் வெட்டு
இன்றுமுதல் வீட்டில் இருந்து வேலை – அரசாங்கம்!
இன்றும் நீண்ட நேரம் மின்வெட்டு - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!
|
|