யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் மண்ணெண்ணை – ஏற்பாடுகள் செய்யப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அறிவிப்பு!

Sunday, October 15th, 2023

யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் மண்ணெண்ணை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை அடுத்தாண்டுக்கான வரவு செலவு திட்டத்தினூடாக மேற்கொள்ளவுள்ளதாகவும் இன்று (15) நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் கிணறுகளை நம்பிய விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் சிறுபோக பயிர்செய்கைக்கான மண்ணெண்ணையில் இயங்கும் நீர்ப்பம்பிகளை விவசாயிகள் காலங்காலமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போதைய எரிபொருள் விலையேற்றத்தாலும், கடந்தாண்டு ஏற்பட்ட நெருக்கடி நிலையிலும் எமது விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு விரக்தி நிலைக்கு சென்றிருந்தார்கள்.

அத்துடன் யாழ் மாவட்டத்தில் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போன்றே விவசாயிகளுக்கும் மானிய அடிப்படையில் மண்ணெண்ணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை அடுத்தாண்டுக்கான வரவு செலவு திட்டத்தினூடாக மேற்கொள்ளவுள்ளதாக இன்று (15) நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: