யாழ் மாவட்ட முதியோர் பேரவை அலுவலகம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா விசேட கவனம்!

யாழ் மாவட்ட முதியோர் பேரவை நடத்துவதற்கு கட்டிட வசதிகள் இல்லாத நிலையில் ஊரெழுவிலுள்ள மனித உரிமைகள் அமைப்பின் கிளை அலுவலக வளாகத்தை அதன் நிறைவேற்று உத்தியோகத்தர் வழங்க முன்வந்துள்ளதுடன் இது தொடர்பான அறிக்கை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தும் கொழும்பு, முதியோர் செயலகத்திலிருந்து இதுவரை எவ்விதமான பதிலும் தமக்கு கிடைக்கவில்லை என்று குறித்த முதியோர் பேரவையால் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சமூக சேவைகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ். பி. திசாநாயக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்ற விவாத நேரத்தில் உரையாற்றுகையிலேயே அவர் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மடு தேவாலயத்தில் பிரதமர் ரணில்!
ஜனாதிபதி செயலணிக்கு புதிய உறுப்பினராக நாமல் நியமனம்
கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – யாழ். மாவட்ட அரசாங்க அத...
|
|