யாழ் மாவட்ட பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைவு – ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

Saturday, July 24th, 2021

முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதிகோரி யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழில் உள்ள மகளிர் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புகள் மற்றும் சமூக மட்ட அமைப்புகள் இணைந்து யாழ் நகர மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்

இதன்போது சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாதே, சிறுவர்களின் எதிர்காலத்தை சிதைக்காதே, வேண்டாம் வேண்டாம் வன்முறை வேண்டாம், பாதுகாப்போம் பாதுகாப்போம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம், மலையகச் சிறுமிக்கு நீதி வேண்டும், பாலியல் வன்முறை வேண்டவே வேண்டாம், பாதுகாப்போம் பாதுகாப்போம் சிறுவர் உரிமையைப் பாதுகாப்போம் உள்ளிட்ட பல்வேறு கோசங்களை இதன்போது எழுப்பியிருந்தனர்.

உழைக்கும் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில்  நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில், மகளிர் அமைப்புக்கள்,அரசியல் கட்சிகள்,சிவில் அமைப்புக்கள் பொதுமக்களென அனைவரும் ஓரணியில் திரண்டு குரல் கொடுத்தனர்.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் எனப்பலரும் எவ்வித பேதமுமின்றி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிகோரும் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: