யாழ். மாவட்ட நெல் செய்கையாளர்களுக்கு திரவ நனோ நைட்ரஜன் உரம் இன்றுமுதல் விநியோகம்!

Monday, November 8th, 2021

யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நெல் செய்கையாளர்களுக்கு இன்றையதினம் திரவ நனோ நைட்ரஜன் உரம் வழங்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த திரவ உரமானது யாழ். மாவட்டத்தில் புங்குடுதீவு மற்றும் நல்லூர் பகுதிகளை விடுத்து ஏனைய 13 பிரிவுகளுக்கு வழங்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த உரமானது ஒரு ஹெக்டேயருக்கு 1.25 லீற்றர் என்ற விகிதத்தில் விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதுடன், தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட பசளை விரைவில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: