யாழ் மாவட்ட திராட்சை செய்கையாளர்களுக்கு விவசாய அமைச்சின் 7 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் திராட்சை செய்கையை ஊக்குவிக்கும் விசேட செயற்றிட்டம்!

Thursday, August 31st, 2023

யாழ் மாவட்ட திராட்சை செய்கையாளர்களுக்கு விவசாய அமைச்சின் 7 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் திராட்சை செய்கையை ஊக்குவிக்கும் விசேட செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தின் சங்கனை, சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சம் பெறுமதியான 165 தூண்கள், பாதுகாப்பு வலை மற்றும் வயர் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை  – திராட்சை செய்கையாளர்களின் விபரமும் திரட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: