யாழ்.மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தீர்மானத்தை ஏற்கமறுக்கும் யாழ் மத்திய பேருந்து நிலையம்!

Friday, March 26th, 2021

யாழ்.மாநகரில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பை தொடர்ந்து நகரின் ஒரு பகுதியை முடக்குவதற்கும் பேருந்து சேவைகளை தற்காலிகமாக நகரின் மத்தியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இ.போ.ச எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மாநகரில் நேற்றயதினமும் 77 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், நேற்று மாலையே கூடிய மாவட்ட கொவிட்19 தடுப்பு செயலணியினர் மாநகரின் ஒரு பகுதியை மூடக்கி போக்குவரத்தை கட்டுப்படுத்துவதுடன், நகரின் மத்திலியிருந்து போக்குவரத்து சேவைகளை கோட்டை சுற்றாடலுக்கு மாற்றுவதற்கு தீர்மானித்திருந்தனர்.

எனினும் இன்று காலை யாழ்.மத்தியபேருந்து நிலையத்தில் வழக்கம்போல் பணிகள் இடம்பெற்றிருந்த நிலையில், இராணுவத்தினர், பொலிஸார், சுகாதார பிரிவினர் மாவட்ட செயலணியின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முயன்றபோது தாங்கள் நகரின் மத்தியிலிருந்து வெளியேறப்போவதில்லை என இ.போ.சபையினர் கூறியுள்ளனர்.

மேலும் தேவையாயின் 10 நாட்களுக்கு சேவையை முடக்கலாம். எனவும் கூறியிருக்கின்றனர். எனினும் மாவட்ட செயலணியின் தீர்மானத்தை அமுல்படுத்துவதில் சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸார், இராணுவத்தினர் விடாப்பிடியாக உள்ளனர்.

இதேபோல் இ.போ.ச தொடர்ந்தும் மறுத்தால் பேருந்து நிலையத்திற்கு சீல் வைக்கப்படலாம். எவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: