யாழ் மாவட்ட அரச பணியாளர்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்க ஏற்பாடு – யாழ் மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Thursday, May 27th, 2021

யாழ் மாவட்டத்தில் பணியாற்றும் அரச பணியாளர்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் –

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சமல் ராஜபக்ச விடம் யாழ் மாவட்ட செயலகம் மற்றும்  பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய கடிதம் சுகாதார அமைச்சு மற்றும் உள்நாட்டு  அமைச்சுக்கு அனுப்பப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் உள்நாட்டு அமைச்சின் ஆளுகையின் கீழ் உள்ள  மாவட்ட செயலகம் உட்பட அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் அனைத்து திணைக்களங்களிலும் கடமை புரிகின்ற அரச உத்தியோகத்தர்களுடைய எண்ணிக்கையை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு கோரி பெற்றிருக்கின்றார்கள்

அதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரத்து 200  அரச பணியாளர்களிற்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என எம்மால்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அத்தோடு உள்ளூராட்சி அமைச்சு உள்ளுராட்சி மன்றங்களில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் தொடர்பான விபரங்களை  பெற்றுள்ளார்கள்  எனவே  இந்த அரச பணிகளில் ஈடுபடும் குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கு மிக விரைவில் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: