யாழ். மாவட்டத்தை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா – இதுவரை 115 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

Tuesday, July 20th, 2021

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் நேற்றையதினம் கொரோனா தொற்றுக்கள்ளாகிய நிலையில் சிகிச்சை பலநின்றி உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தீவகம் வேலணையைச் சேர்ந்த 84 வயதுடைய ஆணொருவரும் தெல்லிப்பழையைச் சேர்ந்த 78 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரையில், 115 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்.உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட பகுதியில் இரண்டரை வயது பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 55 பேர் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் போது உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஐந்து பேருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவர்களில் இரண்டு வயதும் ஆறு மாதமும் நிரம்பிய பெண் குழந்தை ஒன்றுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே

யாழ்.வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், அப்பகுதியுடன் தொடர்பில் இருந்திருக்ககூடும் என்ற அடிப்படையில் பல பகுதிகளில் பீ.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை நடத்தப்படுகின்றது.

இந்நிலையில் தீருவில் பகுதியிலும் சந்தேகத்தின் அடிப்படையில் 100 பேரிடம் எழுமாறாக நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 13 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: