யாழ்.மாவட்டத்தில் 7 பிரதேச செயலகங்களில் கடமையாற்றிய 8 திட்டமிடல் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்!

Wednesday, April 28th, 2021

யாழ்.மாவட்டத்தில் 8 பிரதேச செயலகங்களில் கடமையாற்றிய 7 திட்டமிடல் அதிகாரிகளுக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலர் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், மருதங்கேணி, காரைநகர், சண்டிலிப்பாய், சங்கானை, பருத்தித்துறை, சாவகச்சேரி, கோப்பாய் பிரதேச செயலகங்களில் பணியாற்றிய 7 திட்டமிடல் அதிகாரிகளுக்கே மாவட்ட செயலரினால் இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதன்படி கோப்பாய் பிரதேச செயலக திட்டமிடல் அதிகாரி திலீபன் காரைநகர் பிரதேச செயலகத்திற்கும், காரைநகர் பிரதேசத்தில் கடமையாற்றும் பா. ரேவதி மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கும்,

மருதங்கேணி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிருஷ்ணாளினி கோப்பாய் பிரதேச செயலகத்திற்கும், சங்கானை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் வை.தர்ஷினி

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு பதில் கடமையாகவும், சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் இ.சர்வேந்திரன் யாழ்.பிரதேச செயலகத்திற்கும்

சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் செ. சுபச்செல்வன் பருத்தித்துறை பிரதேச செயலகம் பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: