யாழ் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 500 குடும்பங்கள் உணவு பஞ்ச நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர் – அரச அதிபர் அதிர்ச்சி தகவல்!
Saturday, March 18th, 2023யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 500 குடும்பங்கள் உணவு பஞ்ச நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரம் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட சிவபாலசுந்தரம், உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
குறித்த குடும்பங்களுக்கு அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களில் விசேட வேலை திட்டத்தின் மூலம் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்,
அத்துடன், யாழ். மாவட்டத்தில் கட்டுப்பாட்டு விலையில் நெல்விற்பனை செய்ய விரும்புவோர் தமது பிரதேச செயலர் ஊடாக விற்பனை செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்போகத்தில் அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்யப்பட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசியினை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்திற்கமைய, யாழ் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்து அரிசியாக்கி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|