யாழ். மாவட்டத்தில் 37 பேருக்கு தொற்றுறுதி!

Wednesday, May 5th, 2021

யாழ். மாவட்டத்தில் 37 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் .கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகிய இரண்டு ஆய்வுகூடங்களில் 824 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 43 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் 37 பேருக்கும் கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் தலா மூவருக்கும் என 43 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts:

மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு - இராணுவத் தளபதி அறிவிப்பு!
புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விவகாரம் குறித்த அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் கையளிப்பு!
பல அமைச்சுக்களின் கீழ் இருந்த நிறுவனங்கள், பொறுப்புக்களை திருத்தி அதிவிசேட வர்த்தமானி வௌனியீடு - ஜனா...