யாழ். மாவட்டத்தில் வாழைப்பழங்களின் விலையில் கடும் உயர்வு

யாழ். மாவட்டத்தில் கதலி வாழைப்பழ விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி பொதுச் சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 100 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 130 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.
அத்துடன் இதரை, கப்பல் வகை வாழைப்பழங்களின் விலையிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஆலய உற்சவங்கள், பல திருமண நிகழ்வுகள் மற்றும் ஏனைய சுபநிகழ்வுகள் இடம்பெறுகின்றமையும், கடும் வெப்பமுடனான காலநிலை நீடிப்பதுமே வாழைப்பழங்களின் விலை உயர்விற்குக் காரணமென வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Related posts:
நடைபாதை வியாபாரிகளுக்கு வியாபார உரிமம் எம்மால் ஒரு போதும் வழங்கப்பட மாட்டாது: வலி. தெற்குப் பிரதேச ச...
நாளாந்தம் 8 இலட்சம் லீற்றர் டீசல் வழங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர இணக்கம் - தனியார் பேருந்துகளில் 50 வ...
சகல சௌபாக்கியங்களையும் அருளும் நவராத்திரி விழா இன்று ஆரம்பம்!
|
|