யாழ் மாவட்டத்தில் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டாவது செலுத்துகை முன்னெடுப்பு !

யாழ் மாவட்டத்தில் கடந்த மாத இறுதியில் முதலாவது செலுத்துகை தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கான இரண்டாவது செலத்துகை இன்றுமுதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரது ஆதரவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியூடாக சுகாதார துறையினர் முன்னெடுத்துவரும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் பெரும் பங்களிப்பு வழங்கிவருகின்றனர்.
கொரோனா தொற்று நாட்டில் அதிகரிந்துள்ள நிலையில் அதனை கட்டப்படுத்தும் முயற்சியில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் தொற்றாளர் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரித்து வருவதை சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டிவரும் நிலையில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்காக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அண்மையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் சீன மக்கள் குடியரசு நன்கொடையாக வழங்கிய 16 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளை கடந்த மாதம் கையளித்திருந்தார்.
குறித்த தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிடுகையில் – இக்கட்டான சூழலில் தேவையானளவு தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றமையானது வடக்கு கிழக்கில் வாழும் 30 வயதிற்கு மேற்பட்ட மக்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமாகவே கருதுவதாகவும் கிடைத்த இந்த பாக்கியத்தை எமது மக்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் குறித்த தடுப்பூசிகள் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய முன்னுரிமை அடிப்படையில் முதற்கட்டமாக வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்திற்கு 2 இலட்சம் தடுப்பூசிகளும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 50 ஆயிரம் தடுப்பூசிகளும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 50 ஆயிரம் தடுப்பூசிகளும் வவுனிய மாவட்டத்திற்கு 75 ஆயிரம் தடுப்பூசிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தனர்..
குறித்த முதலாவது செலுத்துகை பெற்றுக்கொண்டவர்களுக்கே இன்று 30 ஆம் திகதிமுதல் இரண்டாவது செலுத்துகை வழங்கப்பட்டுவருகின்றது.
இதனடிப்படையில் ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கர்ப்பிணி தாய்மார் உள்ளிட்ட அனைவருக்கும் இரண்டாவது தடுப்பூசி செலுத்துகை வழங்கப்பட்டு வருகின்றது
இந்நிலையில் குறித்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை நேரில் சென்று அவதானித்து மக்களுக்கு தடுப்பூசி தொடர்பில் விழிப்புணர்வுகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாக பொறுப்பாளர்கள் முன்டினடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|