யாழ் மாவட்டத்தில் பெண்களுக்கான உரிமை மற்றும் பால்நிலை சமத்துவத்தினை மேம்படுத்தல் தொடர்பில் செயலமர்வு!

யாழ் மாவட்டத்தில் பெண்களுக்கான உரிமை மற்றும் பால்நிலை சமத்துவத்தினை மேம்படுத்தல் தொடராக ஊடகவியலாளர்களுடனான கருத்தரங்கு ஒன்று பிறைற் இன் தனியார் விடுதியில் USAID நிறுவன அனுசரணையில் ஜெசாக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த கருத்தரங்கு கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
வளவாளராக சமூக செயற்பாட்டாளர் கிருத்திகாவினால் குறுத்த செயலமர்வில் கருத்துரை வழங்கப்பட்டதுடன் யாழ் மாவட்டத்தின் இவ்விடயம் தொடர்பான நிலைப்பசுகள் மற்றும் பிரச்சினை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டிருந்தது..
குறித்த கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தை முன்நிலைப்படுத்தும் பல்வேறுபட்ட ஊடகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 30 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா தடுப்பூசிகள் குறித்த போதிய அறிவின்மையால் பொதுமக்கள் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு மறுக்கின்றனர்...
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளைமுதல் மீண்டும் பணிக்கு!
ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் - வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு - புதிய முதலீடுகள் தொட...
|
|