யாழ்.மாவட்டத்தில் புதிதாக மூன்று கொரோனா சிகிச்சை மையங்கள்!

Monday, May 10th, 2021

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழிநுட்ப நிறுவனம், நாவற்குழியில் அமைந்துள்ள அரச களஞ்சியக் கட்டடம் என்பவற்றை கோவிட்-19 சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்கு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள வயாவிளானில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றிலும் கோவிட்-19 சிகிச்சை நிலையம் அமைக்கப்படுகிறது.

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றது.

இன்று மாலை நிலவரத்தின் படி 17 ஆயிரத்து 985 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நாவற்குழி அரச களஞ்சியத்தில் 300 நோயாளர் படுக்கைகள் கொண்ட சிகிச்சை நிலையம் அமைக்கப்படவுள்ளது.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழிநுட்ப நிறுவனம் மற்றும் வசாவிளான் கட்டடத்தில் இடவசதிக்கு அமைவாக நோயாளர் படுக்கைகளை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts:

வவுனியாவில் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வயல் காணிகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை – ஈ...
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சகலரும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஒத்துழைப்பை வழங்குங்கள் - இர...
மே 9 ஆம் திகதிக்கு பின்னர் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கட்சி பேதமின்றி கடும் நடவடிக்கை – பா...