யாழ்.மாவட்டத்தில் தமிழ் தெரிந்த பெண் பொலிஸார் தேவை  – யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் அதிபர்!

Friday, January 13th, 2017

வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பணிபுரிவதற்கு தமிழ் தெரிந்த பெண் பொலிஸார் தேவை என்று யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சிவ தர்மரட்ண தெரிவித்துள்ளார்.

தமிழ் தெரிந்த பெண் பொலிஸாருடைய தேவையுள்ள போதிலும் வடக்கில் உள்ள தமிழ் பெண்கள் பொலிஸ் வேலையை தெரிவு செய்வது குறைவு என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சிவில் சமூக பிரதிநிதிகளால் பொலிஸ் நிலையங்களில் தமிழ் தெரிந்த பெண் பொலிஸார் கடமையில் இல்லை. இதனால் பாலியல் சம்பந்தமான முறைப்பாடுகளை பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்வதற்கு பெண்கள் பின் நிற்கின்றார்கள் என்றும் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இதற்குப் பதிலளித்த டி.ஜ.ஜி வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழ் தெரிந்த பெண் பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இருப்பினும் இவ்வாறு கடமைக்கு அமர்த்தப்பட்ட பெண் பொலிஸார் போதுமான எண்ணிக்கையில் இல்லை.  தமிழ் தெரிந்த பெண் பொலிஸாருடைய தேவை பொலிஸ் திணைக்களத்திற்;கு உள்ளது. இருப்பினும் பொலிஸ் ஆட்சேர்ப்பின் போது வடக்கில் உள்ள தமிழ் பெண்கள் அதற்கு விண்ணப்பிப்பது இல்லை. இதுவே தமிழ் பெண் பொலிஸார் அதிகளவில் கடமைக்கு அமர்த்த முடியாமல் உள்ளமைக்கு காரணம் என்றார்.

dig-jaffna4

Related posts: