யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றென அடையாளம் காணப்படுவோர். எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி – போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Wednesday, October 13th, 2021

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 23 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த அனைத்து மரணங்களும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி பதிவாகியவை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும் 12 பெண்களும் அடங்குகின்றனர். அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் 671 கொரோனா நோயாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

அதற்கமைய, நாட்டில் இதுவரை 5 இலட்சத்து 27 ஆயிரத்து 735 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றென அடையாளம் காணப்படுவோர். எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி காணப்படுவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன் போதனா வைத்தியசாலையில் கொரோனா விடுதி ஒன்றும் றேற்றயதினம் மூடப்பட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று தொடர்பில் யாழ்போதனா வைத்தியசாலையின் தற்பேதய நிலமைகள் தொடர்பில் எமது டிடி தொலைக்காட்சியின்  ஊடகவியலாளர் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

000

Related posts: