யாழ்.மாவட்டத்தில் காணாமல் போன பாடசாலை மாணவர்கள் மூவர் பாதுகாப்பாக மீட்பு!

Wednesday, February 1st, 2017

யாழ்.மாவட்டத்தில் காணாமல் போன பாடசாலை மாணவர்கள் மூவரும் யாழ். பொலிஸாரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரி மாணவர்களான குருநகர்ப் பகுதியைச் சேர்ந்த தர்மஜோதி ராஜ்குமார் (வயது- 14), ஹெ. அபிசேன் (வயது- 14), விசுப்டியோன் (வயது-14) ஆகிய மாணவர்கள் மூவரும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பாடசாலை மைதானத்தில் விளையாடச் செல்வதாகக் கூறி விட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.

காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட குறித்த மூன்று மாணவர்களும் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் நேற்று மாலை வந்திறங்கிய நிலையில் அங்கிருந்த நபரொருவரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் குறித்த மாணவர்களிடம்  விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இந்த விசாரணையின் போது, கடந்த திங்கட்கிழமை விளையாடச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து  வெளியே சென்று விளையாட்டின் நிமித்தம் புகையிரதம் மற்றும் பஸ்ஸில் பயணிக்க வேண்டுமென்ற ஆசையில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரை பஸ்ஸில் சென்றோம் எனத் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட மாணவர்களிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளையடுத்துச் சந்தேகநபர்கள் மூவரும் பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

Missing144

Related posts:

இரு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளவர்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளலாம் - சுற்றுலா அதிகார சபை அறிவிப்...
விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு வேலைத்திட்டம் அவசியம் - பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாள...
வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்ட பெருமைமிக்க நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ஜ...