யாழ். மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 536 பேருக்கு கொரோனா தொற்று – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!

Thursday, April 1st, 2021

யாழ். மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் மாத்திரம் 536 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த ஞாயிறு, திங்கள் கிழமைகளில் வர்த்தக நிலையங்கள், சந்தைத் தொகுதிகளில் பணியாற்றுவோருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது 1440 பேரிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருந்ததாகவும் பரிசோதனை முடிவில் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: