யாழ். மாவட்டத்தில் உள்ள 226 உள்ளக வீதிகள் விரைவில் காப்பெற்றாக மாறும்!

Tuesday, May 22nd, 2018

யாழ். மாவட்டத்தில் ஐ(1) வீதி புனரமைப்பு திட்டத்தின் கீழ் 226 வீதிகள் உள்வாங்கப்பட்டுள்ளன. வட மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் 17 உள்ளுராட்சி சபைகளின் ஊடாக திரட்டப்பட்ட ஐறோட் வீதி புனரமைப்பு 2019 இல் முற்பகுதியில் மீள்புனரமைப்பு செய்யப்படும்.

இவ்வாறு நெடுஞ்சாலை அமைச்சின் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் என்.சூரியாராச்சி அறிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் 2016 இல் உள்ளுராட்சி சபைகள் ஊடாக மீள்புனரமைப்பு செய்யப்படவேண்டிய வீதிகளின் விபரம் முதற்கட்டமாக யாழ். மாவட்டத்தில் உள்ள 17 உள்ளுராட்சி சபைகள் ஊடாக திரட்டப்பட்டன. இவ்வாறு திரட்டப்பட்ட வீதிகளே 2019 முற்பகுதியில் மீள்புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

மீள்புனரமைப்பு செய்யப்படவுள்ள வீதிகளின் விபரம் சம்பந்தப்பட்ட உள்ளுராட்சி சபைகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட 226 வீதிகளும் காப்பெற் வீதிகளாக மீள்புனரமைப்பு செய்யப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts: