யாழ். மாவட்டத்தில் உள்ள  வெற்றுக் காணிகள்  தொடர்பில் அறிக்கை  கோரல்!

Friday, December 23rd, 2016

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கலப்பை அண்மித்த வெற்றுக் காணிகளில் மீன் மற்றும் நீர்வாழ் தாவரங்கள் வளர்க்கும் வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பிரதேசத்தில்  தொழில்  வாய்ப்பின்றி இருக்கும்  இளைஞர் யுவதிகளுக்கு அரை ஏக்கர் வீதம் காணிகளை வழங்கி இத்திட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு  யாழ்ப்பாணம் மாவட்டத்தில்  மீன்பிடி சம்பந்தமாக இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த  வேலைத் திட்டத்திற்கு  தேவையான  நிதி மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை அமைச்சின் மூலம் வழங்குவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கலப்பை அண்மித்த பிரதேசங்களில் காணப்படுகின்ற வெற்றுக்காணிகள்  தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு  அமைச்சர்  அதிகாரிகளுக்கு   உத்தரவிட்டுள்ளார்.

DSC_0274 copy

Related posts: