யாழ்.மாவட்டத்திலுள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பயிற்சி!

Wednesday, May 17th, 2017
யாழ் மாவட்டத்திலுள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று எதிர்வரும் 22.05.2017 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 09.00 மணிக்கு யாழ்  மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
புனர்வாழ்வு அதிகார சபையின் ஏற்பாட்டிலும் யாழ் மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்பிலும் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் தச்சுத் தொழில், மின் இணைப்பு, மேசன், நீர்குழாய் பொருத்துதல் மற்றும் பெண்களுக்கு முதியோர் சிறுவர் பராமரிப்பு போன்றவற்றுக்கான தொழில்பயிற்சி இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் யாழ் மாவட்ட இளைஞர் யுவதிகள் அடையாள அட்டையுடன் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெறவும்.

Related posts:

அடுத்த 4 வாரங்கள் மிக அச்சுறுத்தல் மிக்கவை - பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இராஜாங்க அமை...
தமிழ் மக்களை பாதுகாக்கும் நோக்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு இருக்குமானால் வெறுமனே கத்திக் கொ...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 41.7 பில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்துள்ளது இலங்கை மத்திய வங்கி அறிக...