யாழ். மாவட்டத்தின் விவசாயிகளுக்கு இன்றும் நாளையும் மண்ணெண்ணெய் விநியோகம் – அட்டையை காண்பித்து அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிப்பு!

Tuesday, June 7th, 2022

கமநல சேவைகள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளுக்கு இன்றும் நாளையும் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசனின் அறிவுறுத்தலின் பிரகாரம், கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.

பயிர்ச்செய்கை நிலங்களின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்குவதற்கு அண்மையில் எரிபொருள் அட்டை வழங்கப்பட்டது.

அந்த அட்டையைக் காண்பித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இன்றும் நாளையும் மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவித்தார்.

இதனடிப்படையில் அந்த அட்டையைக் காண்பித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இன்றுமுதல் மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்ள முடியும்.

முதல் கட்டமாக விவசாயிகளின் தேவை அளவின் 25 சதவீத மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, எரிபொருள் அட்டை இல்லாத விவசாயிகள் நாளை தத்தமது பிரதேச கமநல சேவைகள் நிலையத்தில் விண்ணப்பத்து பெற்றுக்கொண்டு நாளைமறுதினமே மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை பதவியில் இருந்து விலகுமாறு தேர்தல்க...
புதிய வேலைத்திட்டங்களுக்கு நிதி வழங்கப்பட மாட்டாது - அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு திறைசேரி சுற்ற...
ஒப்பந்த சேவையாளர்களின் சேவை காலத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை நீடிக்க தீர்மானம் - அமைச்சர் தினேஷ் குணவர...