யாழ். மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மின்தடை
Wednesday, November 1st, 2017மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று புதன்கிழமை(01) மின்சாரத் தடை அமுலிலிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம், இன்று காலை-08.30 மணி முதல் மாலை- 05.30 மணி வரை யாழ். குடாநாட்டின் காங்கேசன்துறை கரிசன் 05 ஆவது பொறியியல் படை முகாம், காங்கேசன்துறை சீமேந்து ஆலைப் பகுதி, பெற்றோலியக் கூட்டுத்தாபன அலுவலகம் மற்றும் எண்ணைத் தாங்கிகள் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
கடமையை மீறும் பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!
சாதாரண தர செயன்முறை பரீட்சை ஆரம்பம்!
பறிக்கப்படும் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் – மே நாளில் யாழ் நகரின் முன்னா...
|
|