யாழ். மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் விழா!

யாழ். மாவட்ட இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் விழா இன்று சனிக்கிழமை(17) காலை-09 மணியளவில் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் ஆரம்பமாகிச் சிறப்பாக நடைபெற்றது.
நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருமுன்னிலையில் இடம்பெற்ற இந்த விழாவில் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இதன் போது தேசிய ரீதியில் இடம்பெற்ற இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற அறநெறிப் பாடசாலை மாணவ, மாணவிகள் விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டதுடன் மாணவ, மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
Related posts:
|
|