யாழ் மாநகர முதல்வர் யார்? பரபரப்பில் யாழ்ப்பாணம்!

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகளின் பிரகாரம் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறாத காரணத்தால் ஆட்சியமைப்பதில் பெரும் இழுபறி நிலை இருந்துவரும் நிலையில் இன்று யாழ் மாநகர சபைக்கான சபை அமர்வு நடைபெறுவதுடன் மேயர் தெரிவும் இடம்பெறவுள்ளது.
யாழ்.மாவட்ட உள்ளூராட்சி மன்ற ஆணையளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் குறித்த அமர்வு நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் குறித்த மேயர் பதவிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தரப்பில் முன்மொழியப்பட்ட பிரதிநிதிகள் தத்தமது பெரும்பான்மையை காட்டவேண்டிய நிலையில் சபை அமர்வுகள் ஆரம்பமாகின்றன.
Related posts:
வர்தா புயலில் 500 இலங்கையர்கள் பாதிப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்த்து தெரிவிப்பு!
கொரோனா தடுப்பூசி வழங்கலை வலுப்படுத்த இலங்கைக்கு ஜப்பான் நிதியுதவி!
|
|