யாழ் மாநகர முதல்வரது விடுமுறை தொடர்பில் குழறுபடி: விடுமுறைக் கடிதம் ஏற்றுக்கொள் முடியாது என யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் போரக்கொடி – சபையை வெளிநடப்பு செய்தது ஈ.பி.டி.பி!

Tuesday, April 28th, 2020

யாழ் மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், அவரால் சபைக்கு வழங்கப்பட்ட விடுமுறை கடிதம் குழறுபடி நிறைந்ததொன்றாக காணப்படுவதாகவும் உதவி முதல்வருக்கு அதிகாரம் கொடுக்காது கூட்டத்தை மட்டும் நடத்த அனுமதி கொடுத்ததால் ஏனைய செயற்பாடுகளை நிறைவேற்ற அவருக்கு அதிகாரம் கிடையாது. ஆகவே இந்த சபையின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள் முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் திருமதி அனுசியா சந்துரு சுட்டிக்காட்டியதை அடுத்து யாழ் மாநகரசபையின் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியதால் இன்றைய சபை அமர்வு பெரும் அமளிதுமளியானது. இதையடுத்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் சபை நடவடிக்கைகளிலிரந்து வெளிநடப்பு செய்தனர்.

இன்றையதினம் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக சமூக இடைவெளியை பேணும் வகையில் யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் உதவி முதல்வர் ஈசன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது அண்மைய கால நிலைமைகள் தொடர்பில் ஊறுப்பினர்கள் சபையில் தத்தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

அதன்போது திருமதி அனுசியா சுகாதார ஊழியர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் அவர்களுக்கான உடைகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் ஒப்பந்த அடிப்படையில் மாநகரில் பணியாற்றும் ஊழியர்கள் தற்போது தொழிலில்லாது இருப்பதால் அவர்களுக்கு இடர்கால கடனுதவியாக குறைந்தது 10 ஆயிரம் ரூபா கடனுதவி வழங்க வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை மாநகரசபை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் மாநகர எல்லைக்குள் இருக்கும் வறிய சிறார்களின் போஷாக்கை மையப்படுத்தி அவர்களுக்கு இலவச சத்துணவு வழங்கும் திட்டத்தை இன்றைய சூழ்நிலையிலாவது உருவாக்குவது அவசியம் என்றும் இதற்கு சபை உடனடி தீர்வு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்

இந்நிலையில் இன்றையதினம் சபைக்கு மாநகர முதல்வர் வருகைதராதது தொடர்பில் கடிதம் ஒன்று அனுப்பிவைத்துள்ளார் என சபையில் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடிதம் சபையின் பார்வைக்கு காண்பிக்கப்பட வேண்டும் என திருமதி அனுசியா வலியுறுத்தியிருந்தார்.

குறித்த கடிதத்தில் இன்றைய கூட்டத்திற்கு தன்னால் வரமுடியாது என்றுமு; அதனால் பிரதி முதல்வர் சபையை வழிநடத்த தான் அனுமதி வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அவர் இவ்வாறு எப்படி கடிதம் வரைய முடியும் என்றும் தேர்தல் நடைபெறும் வரை ஆணையாளரும் உதவி முதல்வருமே சபைக்கு பொறுப்பானவர்களாக  இருப்பார் என்றும் இந்த கடிதத்தை நாம் ஏற்றுக்கொள் போவதில்லை என்றும் சுட்டிக்காட்டிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநகரசபை சபை உறுப்பினர்கள் சபையிலிருந்டது வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: