யாழ்.மாநகர பிரதேசத்தில் ஆயுள்வேத மருத்துவ நிலையங்கள் நவீன முறையில் சீரமைப்பு!

Tuesday, January 8th, 2019

யாழ் மாநகர பிரதேசத்தில் உள்ள நான்கு ஆயுள்வேத மருத்துவ நிலையங்கள் நவீன முறையில் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

நல்லூர், பாசையூர், நாவாந்துறை மற்றும் யாழ் நகர் போன்ற இடங்களில் உள்ள ஆயுள்வேத மருத்துவ நிலையங்களே இவ்வாறு சீரமைக்கப்பட்டு வருகின்றன.ஒவ்வொரு ஆயுள்வேத மருத்துவ நிலையங்களும் 5 இலட்சம் ரூபா செலவில் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

யாழ் நகர் மற்றும் பாசையூர் ஆகிய ஆயுள்வேத மருத்துவ நிலையங்கள் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளன. நாவாந்துறை மற்றும் நல்லூர் ஆயுள்வேத மருத்துவ நிலையங்கள் விரைவில் திறந்து வைக்கப்படும்.

Related posts: