யாழ் மாநகர பிரச்சினைக்கு உலக வங்கியின் உதவியுடன் தீர்வு!

Tuesday, March 20th, 2018

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆசனப் பிரச்சினைக்கு உலக வங்கியின் உதவியுடன் தீர்வு காணப்பட்டுள்ளது .

கடந்த மாதம் நடந்த தேர்தலில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்@ராட்சி சபைகளின் பதவிக்  காலம் எதிர்வரும் 20 திகதி ஆரம்பமாகவுள்ளது. உள்@ராட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை முன்னரை விட இரண்டு மடங்காhக அதிகரித்துள்ளதால் பல்வேறு சபைகளிலும் சபை நடத்துவதற்கான வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

 கொழும்பு மாநகர சபையின் 119 உறுப்பினர்களும் இணைந்து சபை அமர்வுகளை நடத்த இட வசதி இல்லாத  நிலை ஏற்பட்டுள்ளது. புதிய சபைகளின் அமர்வுகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கணிசமான நிதி செலவிடப்பட்டு வருகின்றது இந்த நிலையில் யாழ் மாநகர சபையின் முதல் அமர்வு வரம் 26 ம் திகதி நடைபெறவுள்ளது .யாழ் மாநகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 44 உறுப்பினர்களும் இணைந்து அமர்வுகளை நடத்துவதற்கான உட் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன .உலக வங்கியினால் மூலோபாய நகர அபிவிருத்தித் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்தே சபை உறுப்பினர்களுக்காக புத்தம் புதிய ஆசனங்கள் வாங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: