யாழ் மாநகர பகுதிக்கு ஆரோப்பிளான்ற் திட்டத்தினூடாக நீரை சுத்திகரித்து வழங்குவதற்கு நடவடிக்கை!

Sunday, July 25th, 2021

குடிநீர் பிரச்சினையால் நாளாந்தம் பல இன்னல்களை சந்தித்துவரும் யாழ் மாநகரசபை பகுதியில் வாழும் மக்களுக்கு தூய குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கான ஆரோப்பிளான்ற் திட்டத்தினூடாக நீரை சுத்திகரித்து வழங்குவதங்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அமைவாக குறித்த நடவடிக்கை யாழ் மாநகர பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த முன்னேற்பாடுகள் இன்றையதினம் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரதேச செயலக வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது குறித்த பிரதேச எல்லைக்குட்பட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை கலந்துகொண்ட குறித்த நிகழ்வில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது கருத்து தெரிவித்த சிறாம்பையடி மாதர்சங்க தலைவி சந்திரகுமார் அனுசியா கருத்து தெரிவிக்கையில் –

யாழ் மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் சுமார் ஒரு இலட்சத்தி நாற்பதாயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் வெளி மாவட்டங்களில் இருந்தும் பல ஆயிரம் மக்கள் நாளாந்தம் வந்து செல்கின்றனர். இதனால் அதிகளவான நீர் தேவையும் காணப்படுகின்றது.

இதையுணர்ந்து தான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த ஆட்சிக்காலத்தில் இரணைமடு திட்டத்தினூடாக யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை கொண்டுவர முயற்சிகளை முன்னெடுத்திருந்தார். ஆனாலும் ஒருசில அரசியல்வாதிகளின் சுயநலத்தால் அத்திட்டம் தடுக்கப்பட்டது.

இந்நிலையில் இங்குள்ள மக்களுக்கான சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதில் பல்வேறு அசௌகரியங்கள் எதிர்கொள்ளப்பட்டுவருகின்ற நிலையில் இந்த திட்டம் கிடைடக்கப்பெறுவது எமது மக்களுக்கான வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

எமது பிரதேசம் தற்போது குடிநீர் பற்றாக்குறையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. வருங்காலத்தில் குடிநீர் கிடைப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளவேண்டிய நிலையில், இரணமடு நீர் வழங்கள் திட்டம், ஆறுமுகம் திட்டம் என பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சொல்லப்டுகின்றது.

ஆனால் இன்னும்அவை எதுவும் நடமுறைக்கு வரவில்லை. இந்நிலையில் ஆரோப் பிளான்ற் திட்டம் எமக்கு கிடைக்கப்பெற்றதானது ஒரு வரப்பிரசாதமாகவே கருதுகின்றோம்.

இந்த திட்டத்தை கொண்டு வந்ததற்காக ஜனதிபதி அவர்களுக்கும் மான்புமிகு பிரதமர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு எமது மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: