யாழ் மாநகர பகுதிக்குள் டெங்கு ஒழிப்பு!

Thursday, January 24th, 2019

யாழ்ப்பாண மாநகரப் பகுதிக்குட்பட்ட நாவாந்துறை, நல்லூர், அரியாலை, வண்ணார்பண்ணை போன்ற இடங்களில் நேற்றும் இன்றும் டெங்கு ஒழிப்பு இடம்பெறவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

பொதுமக்கள் தத்தமது சுற்றாடலில் நுளம்புப் பெருக்கத்துக்கு ஏதுவான இடங்கள் உள்ளனவா என்பதை அவதானித்து பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்போது நுளம்புப் பெருக்கத்துக்கான இடங்கள் இனங்காணப்படின் எவ்வித முன்னறிவித்தலுமின்றி சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

அதிகரித்துச் செல்லும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து பின்வரும் விடயங்களை கருத்தில்கொள்ள வேண்டும்.

  1. அதிகமான இடங்களில் குளிர்சாதனப் பெட்டியின் பின்புறத்தில் காணப்படும் நீர் தேங்கக் கூடிய பகுதியும் நுளம்புப் பெருக்கத்துக்கான இடங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது.
  2. தண்ணீர் சேமித்து வைக்கப்படும் தொட்டியும் நுளம்புப் பெருக்கத்துக்கு ஏதுவான இடங்களில் ஒன்றாகக் காணப்பட்டுள்ளது.
  3. வீட்டுச் சுற்றாடலில் காணப்படும் தேவையற்ற பொருள்களும் நுளம்புப் பெருக்கத்துக்கு ஏதுவான இடங்களில் ஒன்றாகக் காணப்பட்டுள்ளது.

இவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள் என்று சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts: