யாழ் மாநகர சபை அமர்வின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுபினர் தர்சானந்தன் மதுபோதையில் ரகளை – முதல்வரிடம் உறுப்பினர்கள் முறையிட்டதால் தப்பியோட்டம்!

Tuesday, February 16th, 2021

யாழ் மாநகர சபை அமர்வின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுபினர் தர்சானந்தன் மதுபோதையில் ரகளை செய்து சபை நடவடிக்கைகளை குழப்பமை அம்பலப்படுத்தப்பட்டதால் சபை நடவடிக்கையின் இடைநடுவே தர்சானந்தன் தலைமறைவான சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது –

யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் முதல்வர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது சபையில் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன. 

இந்நிலையில் மக்கள் நலன் சார் விடயங்களை ஏனைய ஊறுப்பினர்கள் முன்வைத்து தமது கருத்துக்களை தெரிவித்த சந்தர்ப்பங்களின் போது குறிக்கிட்டு வீண் விதண்டாவாதம் பேசி குழப்பும் செயற்பாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் தர்சானந்தன்  ஈடுபட்டிந்தார்.

இந்நிலையில் தர்சானந்தனின் பேச்சுக்களில் முரண்பாடுகளும் தவறான கருத்துக்களும் இருந்தமையை அவதானித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் பரமலிங்கம் அனுசியா , தர்சானந்தன் மதுபோதையில் இருப்பதாகவும் அவர் உரையாற்றும்போது மதுபான வாசனை வீசவதாகவும் முதல்வர் மணிவண்ணனின் கவனத்துக்கு கொண்டுசென்றிருந்தார்.

தன்மீது தவறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதால் மருத்துவ பரிசோதனைக்கு தான் தயாராக இருப்பதாக ப.தர்சானந் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் யாழ்.மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி கருத்து தெரிவிக்கையில் குறித்த பரிசோதனையினை சட்ட வைத்திய அதிகாரியால் தான் பரிசோதிக்க முடியும் எனவும் அதற்காக தான் எழுத்து மூலமாக எழுதி அவரை அனுப்புவதாக தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து உறுப்பினர் தர்சானந் விரும்பியதால் பரிசோதனைக்கு செல்லுமாறு மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அவரிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முதலில் குறித்த பரிசோதனைக்கு தான் இணங்குவதாக தெரிவித்திருந்த தர்சானந்தன், பின்னர் அதை மறுத்திருந்த நிலையியில் சபை நடவடிக்கையை இடைநடுவில் கைவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

இதையடுத்து தர்சானந்தன் மதுபோதையில் தான் சபை நடவடிக்கையில் கலந்துகொண்டள்ளார் என பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அதிகரிக்கும் கொரோனா தொற்று: நெடுந்தூர பயண பேருந்து சேவைகள் மீள் அறிவிக்கும் வரையில் இரத்து!
சேதனைப் பசளை உற்பத்தி விவசாயிகளை ஊக்குவிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்தி...
போதைப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய தட்டுப்பாடு காரணமாக போதை மாத்திரைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்க...