யாழ் மாநகர சபையின் 2023 ம் ஆண்டுக்கான பாதீடு மீண்டும் தோற்கடிப்பு!

யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
முன்பதாக அன்றைய முதல்வர் மணிவண்ணன் சமர்ப்பித்த 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் இரண்டாவது சந்தர்ப்பத்துக்கு செல்லும் ஆற்றல் இன்மையால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இதையடுத்து புதிய முதல்வராக பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட் தெரிவாகியுள்ளதாக உள்ளூராட்சி ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து யாழ் மேல் நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு திகதியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் ஆர்னோல்ட் இன்றையதினம் (14)/தனது பாதிட்டை சமையில் சமர்ப்பித்திருந்தார்.
இதன்போது பாதீட்டுக்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் கிடைக்கப்பெற்றது.
இன்னிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு மீண்டும் 8 வாக்குகளால் தோக்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|