யாழ் மாநகர சபையின் ஒத்துப்போக முடியாது- தவறுக்கு மன்னிப்பு கோரினால் தொடர்ந்து ஆதரவு- முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி தெரிவிப்பு!
Tuesday, September 27th, 2022
யாழ் மாநகர சபையின் ஆட்சியாளர்கள் மக்களது நலன்களை கருத்திற்கொள்ளாது தான்தோன்றித்தனமாகவும் சுயனலத்துடனும் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்துள்ள மாநகரின் முன்னாள் முதல்வரும் தற்போதைய மாநகரசபை உறுப்பினருமான திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா இவ்வாறான சம்பவங்களுக்கு மன்னிப்பு கோரினால் மட்டுமே ஆதரவு வழங்குவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிற்பகல் 2 மணிக்கு சபை நடவடிக்கைகள் ஆரம்பமானது. ஆனாலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தமிழரசுக் கட்சி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கஜேந்திரகுமார் அணி, ஐக்கியதேசியக்கட்சி, சுதந்திரக் கட்சி ஆகியன சபை அமர்வை புறக்கணித்திருந்தன. இதனால் மானகரப்சபையின் இன்றைய அமர்வு கோரம் இன்மையால் முன்னெடுக்க முடியாத நிலை உருவானது. இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்-