யாழ்.மாநகர சபைக்கு எதிராக போராட்டம்!

Monday, October 12th, 2020

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இன்று இந்தப் போரட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் அவர்கள் கருத்து வெளியிடுகையில்,

நாங்கள் நீண்ட காலமாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பழக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளை அமைத்து வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் அதனை அகற்றுமாறு யாழ்ப்பாண மாநகர சபை அறிவித்த காலக்கெடு விடுத்துள்ளது.

இந்த விடயத்தினை கவனத்தில் எடுத்து தங்களுக்கு பொருத்தமாக தீர்வு ஒன்றினை முன்வைக்க வேண்டும் வலியுறுத்தி வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதுடன், ஆளுநரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: