யாழ். மாநகர சபைக்குட்பட்ட உணவகங்களுக்கு இறுக்கமான நடைமுறை!

Tuesday, March 20th, 2018

யாழ். மாநகரசபைக்குட்பட்ட உணவகங்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில் இறுக்கமான நடைமுறைகள்  அமுல்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக உணவகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் கைகளுக்கு  கையுறை,தலைக்குத் தொப்பி என்பன அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி உணவகங்களில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களும் மருத்துவச் சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டுமெனவும்  அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.  குறித்த சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்படுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: