யாழ்.மாநகர ஆணையாளரிடம் பலமுறை முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை – தீர்வை பெற்றுத்தாருங்கள் என ஈ.பி.டி.பி.கட்சியிடம் கந்தர்மடம் தென்கிழக்கு பகுதி மக்கள் கோரிக்கை!

நல்லூர் – கந்தர்மடம் தென்கிழக்கு பகுதி மக்களது குடியிரப்பு நிலங்கள் தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுதருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றையதினம் குறித்த பகுதி மக்களது வாழ்வியல் நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக சென்றிருந்து நல்லூர் தொகுதி நிர்வாக செயலாளர் அம்பலம் இரவிந்திரதாசனிடம் மக்கள் குறித்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
கோயில் காணியில் தாம் நீண்டகாலம் குடியிருப்பதனால் தமக்கான அரச உதவிகள் மற்றும் வீட்டுத்திட்டங்கள் எதுவும் வழங்கப்படாதுள்ளதாகவும் இதற்கு தமது குடியிருப்பு நிலங்ளுக்கு காணி உரிமம் இன்மையே காரணமாக காட்டப்படுவதாகவும் குறித்தபகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமது பகுதிக்கு தற்போது வீட்டத்திட்டம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வாழும் குடியிரப்பாளர்களிடம் காணி உரிமம் இல்லாமையால் வீட்டுத்திட்டம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை தாம் இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தன்.
இதனிடையே தமது பகுதியிலுள்ள வடிநீர் கால்வாய் புரமைக்கப்படாமையால் குடியிரப்பு பகுதியில் மழை காலங்களில் நீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடுகளை தாம் எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்த மக்கள் இது தொடர்பாக பல தடவைகள் யாழ் மாநகர ஆணையாளரிடம் முறையிட்டும் இதுவரை அதற்கான நடவடிக்கையை குறித்த அதிகாரிகள் மேற்கொண்டு தரவில்லை எனவும் தமது பகுதியில் உள்ள முதியவர்களுக்கான சமுர்த்திக் கொடுப்பனவிலும் அதிகாரிகளால் பலருக்கு பாரபட்சம் காட்டப்படவதாகவும் குற்றம் சாட்டியிருந்தமக்கள் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|