யாழ் மாநகரை துய்மைப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை – மாநகர சபை ஆணையாளர் !

யாழ்ப்பாண மாநகரை தூய்மையான பிரதேசமாக மாற்ற மக்களின் ஒத்துழைப்பு தேவை என்று யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்
செய்திக்குறிப்பில் உள்ளதாவது :
எமது பிரதேசத்தின் சுத்தம் எங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து பொறுப்புடன் திண்மக்கழிவு முகாமைத்துவத்தில் ஈடுபட்டால் மட்டுமே மாநகர அழகு, தூய்மை, சுகாதாரம், அபிவிருத்தி என்பன விரைவில் சாத்தியமாகும். வீடுகளில் பயன்படுத்தப்படும் உக்கக்கூடிய பொருட்களை எரியூட்டுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் அதனை வீட்டுக்காணிகளிலேயே புதைத்து மண்வளத்தை மேம்படுத்துங்கள் தொற்று நோய்கள் அபாயமுள்ள கழிவுகளை பொது இடங்களில் வீசுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் திண்மக் கழிவுகளை பொது இடங்களில் வீசுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் திண்மக்கழிவுகளை தரம்பிரித்து வழங்கி பணியாளர்களுக்கு உதவி செய்யுங்கள்.
பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கழிவு அகற்றும் தொட்டிகளில் தரம்பிரித்து கழிவுகளைப்போடுங்கள் இறந்த விலங்குகள் இறைச்சிக்கழிவுகள் வீசுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இலத்திரனியல் கழிவுகளை மாநகர சபையின் கழிவு சேகரிப்பு நிலையங்களில் ஒப்படையுங்கள் என்றுள்ளது.
Related posts:
|
|