யாழ்.மாநகரை அண்டிக் காணப்படும் கழிவு நீரகற்றும் வாய்க்கால்களை துரிதகதியில் தூர்வார வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல்

யாழ் மாநகரை அண்டிய பகுதிகளில் தூர்வடைந்து காணப்படும் கழிவு நீர் வாய்க்கால்களை தூர்வாரி, மழை காலங்களில் குடிமனைகளில் தேங்கி நிற்கும் கழிவு நீரை வெளியேற்றுவதற்காக முன்கூட்டியே துரிதகதியில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்.மாநகரசபையின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
யாழ்.மாநகரை அபிவிருத்தி செய்யவேண்டுமானால் முதலில் தூர்வடைந்து காணப்படுகின்ற கழிவகற்றும் வாய்க்கால்களை தூர்வாரவேண்டும்.
கடந்த காலங்களில் குடிமனைகளில் தேங்கி நிற்கும் கழிவு நீரை வெளியேற்றுவதற்காக யாழ் மாநகரின் பல பாகங்களிலும் காணப்பட்ட கழிவுநீரகற்றும் வாய்க்கால் பல இன்று காணாமல் போயுள்ளது. அதைவிட கொடுமையானவிடயம் சில வாய்க்கால் இருந்த இடங்களில் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குளங்கள் பல தூர்வாராது கிடக்கின்றது. இவ்வாறான காரணங்களால் யாழ் மாநகர பகுதி மழை காலங்களில் வெள்ளக் காடாக இருக்க நேர்கின்றது.
இதை நிவர்த்தி செய்ய யாழ் மாநகரசபை உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுத்து எமது யாழ் மாநகரின் சுத்தம் சுகாதாரங்களை பேணிப்பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
Related posts:
|
|