யாழ்.மாநகரில் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை – மாநகரம் தொடர்ந்து முடக்கப்படுமா என்பது தொடர்பில் இன்றைய பரிசோதனை முடிவுகளே தீர்மானிக்கும்!

Monday, April 5th, 2021

யாழ்.மாநகரில் முடக்கப்பட்டுள்ள பகுதி வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு குறிப்பாக யாழ்.மாநகரசபை எல்லைக்குள் வசிப்போர் மட்டும் இன்று  திங்கள்கிழமை  பீ.சி.ஆர் பரிசோதனை காலை 7.30 மணிமுதல் நவீன சந்தை கட்டிட தொகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

அதேநேரம் கடந்த முறை நெருக்கடி காரணமாக  மாநகரசபை எல்லைக்கு வெளியில் வதிவிடத்தைக் கொண்டவர்கள் அந்தந்தப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்றுமு; தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 28, மற்றும் 9 ஆம் திகதிகளில் பிசிஆர் பரிசோதனை செய்தவர்களுக்கும், இதுவரை பிசிஆர் பரிசோதனை செய்யாதவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும் என்றும் 28,29 ஆம் திகதிகளில் செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்ட கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை நடைபெறும் சோதனையை செய்ய வேண்டாம் எனறும் தெரிவித்தள்ள சுகாதார தரப்பினர் அவர்களுக்குப் பிறிதொருதினத்தில் பிசிஆர் பரிசோதனை செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

இதேவேளை இன்று நடத்தப்படும் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் அடிப்படையிலேயே மாநகரை தொடர்ந்து முடக்குவதா? அல்லது முடக்கலில் இருந்து நீக்குவதா? என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: