யாழ் மாநகரில் புதிய காவலர் படை!
Wednesday, April 7th, 2021000
யாழ்.மாநகர பகுதியில் காவலர் படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதுடன் அந்தப் படை தமது பணியை ஆரம்பித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காவலர் படை பரீட்சார்த்தமாக இன்றையதினம் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் –
யாழ்.மாநகரில் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறையை கண்காணித்தல், மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காகவே புதிய மாநகர பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
இந்த மாநகர பாதுகாப்பு படை. நாளை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ள நிலையில் இன்று காலை பரீட்சார்த்தமாக நல்லூர் சுற்றாடலில் வாகன ஒயில் ஊற்றப்பட்ட நிலையில் விபத்துக்களை தவிர்க்க முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணித்துள்ளது..
யாழ் மாநகர சுகாதார பணிமனைகளில் பணியாற்றிய தமிழ் உத்தியோகத்தர்கள் 5 பேரை புதிய சீருடை ஒன்றை அறிமுகம் செய்து மாநகர காவல் படை என்ற பெயரில் யாழ் மாநகரசபை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|