யாழ்.மாநகரில் சோபையிழந்தது புத்தாண்டு வியாபாரம் – வியாபாரிகள் கவலை!

Tuesday, April 13th, 2021

இலங்கையில் நாளையதினம் சித்திரைப் புத்தாண்டு கொண்டாடப்பட்டுவருகின்ற நிலையில்  கிளிநொச்சியில் மக்களும்  புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர்.

தமிழ் சிங்கள புதுவருடப் பிறப்பு நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், நாடெங்கிலும் புத்தாண்டை வரவேற்க தயாராகும் மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கிளிநொச்சி மக்களும் மும்முரமாக பொருட் கள் கொள்வனவு செய்து வருகின்றனர். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் மக்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து யாழ். நகர் பகுதிகளில் இம்முறை சித்திரைப் புத்தாண்டு வியாபாரம் சோபையிழந்து காணப்படுவதாக வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக புடவை விற்பனை நிலையங்கள் பல இரண்டு வாரங்களாக மூடபட்டிருந்தன.

எனினும் கடந்த வாரம் வர்த்தக நிலையங்களை மீளத் திறக்க அனுமதியளிக்கப்பட்ட போதும் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள் இருந்தால் அவர்களின் கடைகளைத் திறக்க அனுமதிவில்லை.

இந்நிலையில் கொரோனா பரவல் அச்சநிலை காரணமாக யாழ். மாநகரில் இம்முறை சித்திரைப் புத்தாண்டு புடவை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, யாழ்ப்பாணத்தில் நடைபாதை வியாபாரம் ஏராளமாக இடம்பெறுகின்றன.

இந்நிலைமைகளால் யாழ்ப்பாணம் மாநகரில் புத்தாண்டு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சிறு வர்த்தக நிலையங்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் வர்த்தகர்கள் கவலை வெளியிட்டள்ளனர்.

Related posts: